மன்னார் மடு தேவாலயத் திருவிழாவையொட்டி அப்பகுதியை யுத்தமற்ற பிரதேசமாக தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா இராணுவமும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மன்னார் ஆயர் ராயப்பு யோசப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
தேவாலயத்துக்கு வருவோருக்கான மன்னார் வீதியை தமிழீழ விடுதலைப் புலிகள் திறந்துவிட உள்ளனர். மடு தேவாலயத் திருவிழா குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினோம்.
இப்பகுதியில் தாக்குதல்களை நிறுத்த சிறிலங்கா இராணுவம் ஒப்புக் கொண்டது. அத்தகைய உறுதிமொழியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தைச் சந்தித்தோம். விடுதலைப் புலிகளும் அதனை ஒப்புக்கொண்டனர் என்றார் அவர்.
Friday, June 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment