Friday, June 29, 2007

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை தலைவர் கொலை

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் தலைவரான தில்லைநாயகம் உதயகுமார் வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும்இ கைக்குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான அவர்இ கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு பிரதேச சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு குழந்கைளின் தந்தையான இவர்இ வியாழக்கிழமை இரவு தனது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வீட்டில் இருந்த வேலை அடையாளம் தெரியாத ஆட்களினால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இவரது சடலம்இ அவரது வீட்டிலிருந்து 100 மீட்டருக்கு அப்பாலுள்ள வளவொன்றிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments: